• Home
  • தமிழ்நாடு
  • பேச்சுத் திறனை மேம்படுத்துவதில் பள்ளியின் புதிய முயற்சி!
தமிழ்நாடு

பேச்சுத் திறனை மேம்படுத்துவதில் பள்ளியின் புதிய முயற்சி!

Email :120

(Sreregam Shunmuga Aided Middle School: TV Anchor Interview மூலம் குழந்தைகளின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் புதிய அணுகுமுறை)

ஆக்கம்:


எஸ். சிவக்குமார்

முதல்வர் (பணி நிறைவு),

மாவட்ட ஆசிரியர் கல்வி, மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob..6383690730

அறிமுகம்:
பேச்சுத் திறன்(Speaking Skill) என்பது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கருத்துகளை தெளிவாகவும் சரளமாகவும் வெளிப்படுத்தும் திறனை குறிக்கிறது.


ஸ்ரீரங்கம் சண்முகா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி D. ஜெயபாக்கியம் மற்றும் ஆசிரியர்கள் திருமதி G. ஜெயந்தி மற்றும் திருமதி V. ஆனந்தவல்லி ஆகியோர்  தங்கள் பள்ளி குழந்தைகளின் பேச்சுத் திறனை மேம்படுத்த புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தினர்.

இது TV Anchor Interview முறையின் மூலம் நிகழ்த்தப்படுகிறது, இதில் மாணவர்கள் கைக்கைப் (Toy Hand Mic) பயன்படுத்தி நேர்காணலில் கலந்துகொள்கின்றனர்.

செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
சரளமாக பேசுதல்:
குழந்தைகள் தேவையற்ற இடைவெளிகள் இன்றி தங்கள் கருத்துகளை  பேச கற்றுக்கொள்கிறார்கள்.

உச்சரிப்பு மேம்பாடு:
சொற்களை சரியாக உச்சரிக்கவும், சரியான தொனியை பயன்படுத்தவும் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

சொல் வளம்:
குழந்தைகள் தங்களின் சொல் வளத்தை அதிகரிக்க செய்ய புதிய சொற்கள் மற்றும் வார்த்தைகளின் பயன்பாட்டை கற்றுக்கொள்கின்றனர்.

வாக்கிய அமைப்பு:
துல்லியமான வாக்கியங்களை உருவாக்கி பேச்சின் தரத்தை உயர்த்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தெளிவு:
தொகுப்பாளராக நடிக்க வேண்டிய குழந்தை,  குழந்தைகளின் பேச்சு கேட்பவர்களுக்கு தெளிவாக இருக்குமாறு கவனிக்கின்றனர்.

நம்பிக்கையுடன் பேசுதல்:
கைக்கைப் பயன்படுத்துவதால், குழந்தைகள் தங்களின் நம்பிக்கையை மேம்படுத்தி, கூட்டத்தில் பேச தயக்கம் இன்றி பழகுகின்றனர்.

கற்றல் வெளிப்பாடு:
நேர்காணல் முறையில், மற்றவரின் கேள்விகளை கவனமாகக் கேட்டு சரியான பதில்களை அளிப்பதில் அவர்கள் திறமையானவர்களாக மாறுகிறார்கள்.

திட்டத்தின் சிறப்பு:
இந்த முயற்சி மூலம், குழந்தைகள்  பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள முடிகிறது. இந்தப் புதிய முயற்சியில் குழந்தைகள் மட்டுமல்லாமல், பெற்றோர்கள்    உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

திறனின் அவசியம்:
பேச்சுத் திறன் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சாதனையை உருவாக்கவும் உதவுகிறது. குறிப்பாக, சமகால சமூகத்தில் TV Anchor போன்ற தொழில்களுக்கு இது மிகவும் தேவையான திறன் ஆகும்.

முடிவு:
ஸ்ரீரங்கம் சண்முகா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின்
   இந்த புதிய முயற்சி குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. குழந்தைகள் தங்கள் பயத்தைக் கடந்து உற்சாகமாக பேசுவதில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இது அவர்களின் எதிர்கால வாழ்வில் ஒரு பொன்னான அடித்தளமாக இருக்கும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts