திருச்சிராப்பள்ளி அருள்மிகு உறையூர் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் திருத்தேர் விழாவானது 14/04/2025 திங்கட்கிழமையான இன்று காலை 10 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் கோவில் நிர்வாகத்தின் வேண்டுதலை ஏற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 20 பேர் திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ் மற்றும் முத்துக்குமார் அவர்களின் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களை நெறிப்படுத்துதல், அன்னதானம் வழங்குதல் பால்குடம் மற்றும் அக்னிசட்டி போன்றவற்றை எடுத்து வரும் பக்தர்களை நெறிப்படுத்துதல் தேர் வீதி வலம் வரும் வழியில் கூட்டத்தை முறைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டனர்.












