திருச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்ற Dr. அம்பேத்கர் பிறந்தநாள் விழா
இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை Dr.B.R. அம்பேத்கார் அவர்களின் 134வது பிறந்த தின விழா திருச்சியில் (13.04.2025) மாலை 6.30 மணியில் SRC சாலையில் உள்ள ஸ்ருதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் Dr. B.R. அம்பேத்கார் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் கருத்துரையும், அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் கையெழுத்திடும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. Dr. அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவரும் வல்லூறு பத்திரிகை குழுமத்தின் தலைவருமான முனைவர் எஸ். என் மோகன் ராம் சிறப்புரை ஆற்றினார், மேலும் இந்த விழாவில் ஜான்சி ராணி மகளிர் மன்ற தலைவி ஹேமலதா,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத் தலைவர் சங்கர், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி, கணேசன், D. சீனிவாச பிரசாத் , மோகன், முத்தழகு, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













