• Home
  • தமிழ்நாடு
  • இளவேனில் காலமே இதம் தீண்டும் பருவமே இதயங்கள் இனிமையில் நீராடி வரவேற்கும் சித்திரை மகளே வருகவே!
தமிழ்நாடு

இளவேனில் காலமே இதம் தீண்டும் பருவமே இதயங்கள் இனிமையில் நீராடி வரவேற்கும் சித்திரை மகளே வருகவே!

Email :115

இளவேனில் காலமே இதம் தீண்டும் பருவமே இதயங்கள் இனிமையில் நீராடி வரவேற்கும் சித்திரை மகளே வருகவே
திணைகள் தோறும் கோடிப் பூக்கள்.
கோடை வானின் நீலச் சேலையில் கொள்ளை அழகுடன் குலுங்கிடும் மஞ்சள் வெயில் மசக்கையாகி மயங்கும். நிலமெங்கும் வண்டினங்களின் மோக ரீங்காரம். வாசலில் வசந்த காலம் சித்திரம் தீட்டும் சித்திரை ஏகாந்தம்!
லட்சம் பூக்களுடன் மரங்கள் பூப்பெய்தி ஊரெங்கும் காற்றில் காதல் ராகங்கள் உலாவரும், வெயிலுக்கு வண்ணங்கள் கூட்டிடும். ! கோடை கொண்டாட்டம் !

வெயில் என்பது வெறுப்பின் அடையாளமல்ல உழைப்பின் அடையாளம்!
வெய்யோனின் தீவிரத்தாக்கம் மகசூலை வாரிக் குவித்திடும்
மலர்களாய், கனிகளாய் விளைச்சலாய். எங்கெங்கு காணினும் வெயில் இன்பம். மாம்பூக்கள், வேப்பம் பூக்கள் வெப்பாலை, புங்கள் சரக்கொன்றை மரக்கொன்றை நுணா, மந்தாரை  வரிசைக்கட்டும் மரங்கள் பூக்கும் காலமே மண்ணின் மகிமைமிகு மகத்தான அகத்திணைகள் இணைசேரும் திருவிழாக் காலம் !
வெயில் என்பது வாழ்வு
வெயில் என்பது வரம்,
வெயில் என்பது உணவு,
வெயில் என்பது மகசூல்,
வெயில் என்பது இருள் குடிக்கும் வெளிச்சம்!
வெயில் என்பது கோடை,
வெயில் என்பது சீர்வரிசை வெயில் என்பது தேரோட்டம். வெயில் என்பது சத்தான மூலிகை,
வெயில் என்பது பெருங்காதல், வெயில் என்பது பெருமோகம்.
வெயில் என்பது பேரன்பு.
வெயில் என்பது பெருங்கருணை
வெயில் என்பது பேரணைப்பு
வெயில் என்பது பெருங்கோபம்
வெயில் என்பது பெருந்தீண்டல்
வெயில் என்பது வெடவெளி குல தெய்வம்,
வெயில் என்பது பெருந்தாகம். வெயில் என்பது நீரோட்டம், வெயில் என்பது பேரின்பப் புணர்ச்சி,
வெயில் என்பது பெருவெக்கை
வெயில் என்பது பெருவேட்கை
வெயில் என்பது பெருவியர்வை, வெயில் என்பது எம்நிலத்தின் மரபணு,

செயற்கை குளிர்மை
செயற்கை மின்ணணு ஒளி மரபணுமாற்றுத்தாவரங்கள், கனிகன் விதைகளுக்கு முன்
பனம் பூக்களாய், புளியம் பூக்களாய்
வெயில் குடித்து  துய்ப்போம்
துவர்ப்போம்
காய்ப்போம் இனிப்போம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
வளையாத நெடும்பனையாய் எழுந்து நிற்போம். தமிழ்ப் பனங்கருக்காய் உயர்ந்து நிற்போம்!
நோய் கொண்டு வரும்
வலிதரும் வடக்கின் வாடைக் காற்றைக் கிழித்து
நெடுந்தமிழ்ப் பனையாய்
தனித்துவமாய் நிமிர்ந்து நிற்போம் மரபணு மாற்றுக் கலப்படமில்லாமல் மரபணு மாறாது இணைந்து நிற்போம் இளவேனில் காலத்தை வரவேற்போம் கொண்டாடுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts