
மதுரையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று 09.02.2025 ஞாயிறு சிறுவர்களுக்கான கதை எழுதும் பயிற்சி நிகழ்வில் எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் இஸ்ரோவின் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
குழந்தைகளுக்கான கதை எழுதும் பயிற்சியினை எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்களும், குழந்தைகளுடன் சிறப்பான ஒரு உரையாடலை மதிப்பிற்குரிய மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் நிகழ்த்தினார்.
மேலும் சிறுவர்களுக்கான நூல் விமர்சன நிகழ்வு நடைபெற்றது.
நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு எழுத்தாளரும் கதை சொல்லியுமான கார்த்திகா கவின் குமார் அவர்களின் கரங்களால் பரிசு வழங்கப்பட்டது.















