• Home
  • தமிழ்நாடு
  • நேற்று 08.02.2025 மாவட்ட அளவிலான கிராம அறிவியல் திருவிழா திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

நேற்று 08.02.2025 மாவட்ட அளவிலான கிராம அறிவியல் திருவிழா திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.

Email :141

நேற்று 08.02.2025 மாவட்ட அளவிலான கிராம அறிவியல் திருவிழா திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வானவில் மன்ற கருத்தாளர் திருமிகு.பிரதீபா அவர்கள் அவரது கிராமத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இதில் திருச்சி மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். கிராமத்தில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளருமான கவிஞர் இளஞ்சேட்சென்னி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகள், பெற்றோர்கள் கணித செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை தொடக்கம் முதல் இறுதிவரை மிகச்சிறப்பாக திட்டமிட்டு  வழி நடத்திய மாவட்ட கருத்தாளர் திரு.பழனியான்டி அவர்களுக்கு வானவில் மன்ற கருத்தாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts