மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்களுக்கான கோடை நூலக முகாம்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மே மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று 15.05.2025 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ‘கலையும், அறிவியலும்’ நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் ச.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான து.காந்தி, சு.ஸ்ரீதரன் ஆகியோர் குழந்தைகளிடம் கலையும் அறிவியலும் எவ்வாறு செயல்படுகிறது என்று சோதனைகளின் மூலம் செய்து காட்டியும், பாட்டுப் பாடியும் காண்பித்தனர். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சு.தனலெட்சுமி, நூலகர் ப.ஜெயசங்கர், வாசகர் வட்ட நிர்வாகிகள் அருணாச்சலம், நாகப்பன், மாரிமுத்து, வைகுண்ட மூர்த்தி, நன்மாறன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து கோடை கால நிகழ்வுகளிலும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
அன்புடன்,
மு. மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
செல் : 97878 66135













