இன்று திருச்சி மாவட்டம் வையம்பட்டி வட்டார பகுதியில் உள்ள கருங்குளம் ஊராட்சியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் பகுதியில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் வையம்பட்டி வட்டார சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து வளர் இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது காலை 11:30 மணிக்கு மருத்துவர் திரு ஹரிஹரன் அவர்கள் தலைமையிலும் மற்றும் திரு டி செந்தில்குமார் ஐ சி டி சி கவுன்சிலர் அவர்கள் முன்னிலையிலும் இந்த விழிப்புணர் நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது.

மருத்துவர் அவர்கள் நமது உடல் நலத்தின் முக்கியத்துவமான விஷயம் என்னவென்றால் இன்று அதிகமாக இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு அனைத்து குழந்தைகளுக்கும் தேவைப்படுகிறது அதற்காக அரசாங்கம் பல முன்னேற்பாடுகளும் பல நலத்திட்டங்களும் செய்து கொண்டிருக்கிறது குறிப்பாக அயன் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரையும் மற்றும் கொக்கி மற்றும் நாடா புழு அதனை உடலில் இருந்து அழிப்பதற்கு அதற்குரிய மாத்திரையும் அரசாங்கம் இலவசமாக தருகிறது ஆகவே அதனை நாம் அன்றாட பயன்படுத்த வேண்டும்

குறிப்பாக பெண் குழந்தைகள் பருவம் அடையும் பொழுது மாதவிடாய் சுழற்சி சரியான விதத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் நாம் உணவு உண்ணும் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் குறிப்பாக எண்ணெயில் பொறித்து முக்கிய எடுக்கப்பட்ட உணவுகளை நாம் குறைத்து உண்ண வேண்டும் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக விலை குறைவு உள்ள சிகப்பு அவல் கருப்பு கொண்ட கடலை இது போன்ற புரதசத்து நாட்டு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை பற்றி மருத்துவர் எடுத்துக் கூறினார் அதனைத் தொடர்ந்து திருடி செந்தில்குமார் அவர்கள் நாம் ரத்த சோகை பாதிப்படையும் பொழுது நமது மூளை செயல் திறனை

சற்று குறைக்கும் ஞாபக சக்தியின்மை அதிகப்படுத்தும் ஆகவே நாம் அதிக அளவு நல்ல உணவுகளை உண்ண வேண்டும் நமக்கு ஞாபக சக்தி வர வேண்டும் என்றால் உடலுக்கு தேவையான சத்தான நாட்டு காய்கறிகளை உண்ண வேண்டும் என்று கூறினார் மற்றும் அப்பகுதி கிராம செவிலியர் அவர்கள் குழந்தைகளுக்கு உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் இறுதியாக நன்றியுரை திரு ராபின்சன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்
நன்றி கூறினார்.












