நெகிழி ஒழிப்பு, மரம் வளர்த்தல், பூமி பாதுகாப்பு, மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆற்றல் போன்ற முக்கிய நோக்கங்களை மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், பரப்பவும் பாதுகாக்கவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை விழிப்புணர்வு போட்டிகளையும், கருத்தரங்குகளையும் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மாரத்தான் ஓட்டப் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 6:45 மணி அளவில் நடைபெற்றது. இதில் சுமார் 120 போட்டியாளர்களும் 30 தன்னார்வலர்களும் கலந்து கொண்டு முன்பதிவு செய்தனர்.போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு திருமிகு .ஜாஃபர் அலி ,மாமன்ற உறுப்பினர் 61-வது வார்டு. திருமிகு அம்சவேணி, காவல் ஆய்வாளர், கே.கே. நகர் காவல் நிலையம். மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் திருமிகு .கண்ணன் ஆகியோர் ரொக்கப் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்த்தியது, தேசியப் பசுமை படை லால்குடி கல்வி மாவட்ட பொறுப்பாளர் வாய்ஸ் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் திருமிகு. கிரிகோரி அவர்கள். இறுதியாக பங்கேற்பாளர்ள், பொதுமக்கள் அனைவருக்கும் துணிப் பைகளும், விழிப்புணர்வு

துண்டுபிரசுரங்களும், சான்றிதழ்களும் வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்வினை முடிவு செய்தனர்.