தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மணப்பாறை கிளை மாநாடு!
நேற்று 11.10.2025 மாலை 3 மணிக்கு மணப்பாறை பாரதியார் நகரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் மணப்பாறை கிளை மாநாடு கல்லூரி முதல்வர் திரு.வினோத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அணியாப்பூர் கிளை நிர்வாகி திருமிகு.சாந்தா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.புவனேஸ்வரி அவர்கள் செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

மாவட்ட இணைச் செயலாளரும், மணப்பாறை கிளைக்கான மாவட்ட பொறுப்பாளருமான திருமிகு.யோகலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். புதிய கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து, நிறைவுரை வழங்கினார்.

புதிய கிளைத் தலைவராக திரு.சுப்பிரமணி, செயலாளராக திருமிகு.புவனேஸ்வரி, பொருளாளராக திரு.கேசவன், துணைத் தலைவர்களாக திருமிகு.தமிழ்ச்செல்வி, திரு.வெள்ளைத்துரை, இணைச் செயலாளர்களாக திரு.ஜூடு பிச்சைமுத்து, திருமிகு.கீர்த்தனா, செயற்குழு உறுப்பினர்களாக திருமிகு.ரம்யா, திருமிகு.கலைச்செல்வி, திருமிகு.எல்சபெத் ராணி, திருமிகு.அம்சவள்ளி, திருமிகு.இன்சிலின், திருமிகு.யோகப்பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


துளிர் திறனறிதல் தேர்வு போஸ்டர் வெளியிடப்பட்டு, 1000 மாணவர்களை துளிர் திறனறிதல் தேர்வில் பங்கேற்க வைப்பது என திட்டமிடப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகளுக்கும், இந்தக்கல்வி ஆண்டில் (2025-26), மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கிளைப் பொருளாளர் திரு.கேசவன் அவர்களுக்கும், வரவேற்பு நடனமாடிய மாணவி மோகனாம்பாள் அவர்களுக்கும், மாவட்ட மையத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக கிளை உறுப்பினர் திருமிகு.ஜோஸ்பின் நன்றியுரை வழங்கினார்.














