• Home
  • தமிழ்நாடு
  • திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 19.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 19.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

Email :89

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 19.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன்  இனிதே தொடங்கியது. திரு. ர. பிரபு வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி  பிராட்டியூர், செல்வி இரா. தனிஷா மோகனா, 7ஆம் நிலை, “இயற்கையைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி  பிராட்டியூர், சு.க. ஹர்சினி, 12 ஆம் நிலை, “மனிதம் போற்று” என்ற தலைப்பில் உரையாடினார். காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி, முதலாம் ஆண்டு மாணவி, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை செல்வி ரி. லத்திஷா பர்வீன், “முடியரசனின் மொழி உணர்ச்சி” என்ற தலைப்பில் உரையாடினார்.

பன்முகக் கலைஞர், கவிஞர் இலால்குடி த. முருகானந்தம் “தமிழ் வளர்த்த சமயங்கள்” என்ற தலைப்பில் உரையாடினார். இக்கூட்டத்தில் உரையாடிய அனைத்து மாணவர்களுக்கும், பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மன்றத்தின் சகோதரர் திரு. சு. ஜெகன் அவர்கள் நிறுவனத்தின் தினசரி நாட்காட்டி அறிமுகப்படுத்தி அனைவருக்கும் வழங்கினார். பொறிஞர் நா. பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின், தலைவர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தணிக்கையாளர்,

மன்ற ஆலோசர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,

பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts