நேற்று 20.03.25 மாலை 4 மணியளவில் திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி யில் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மருதவாணன் அவர்கள் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் / துணை தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு விருந்தினர்களாக :
திருவானைக்காவல் அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் திரு.வி.வே.விஸ்வேஸ்வரன் அவர்களும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது வார்டு உறுப்பினர் திரு.அப்பீஸ்.S.முத்துகுமார் அவர்களும் பன்னாட்டு அரிமா சங்க தஞ்சை மாவட்ட தலைவர் திரு.ஜெயராமன் அவர்களும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி திரு.வாசன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

பரிசுகள் வழங்கிய திருச்சி கோபால்தாஸ் நகை கடை நிர்வாகம் சார்பில் அதன் மேலாளர்.திரு.சிவகுமார் அவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் திரு.வி.வே.விஸ்வேஸ்வரன் அவர்கள் பேசுகையில் ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறைக்கான நிதியை உயர்த்தி வருவதை (2023 ல் சுமார் 32000 கோடி / 2024 ல் சுமார் 41000 கோடி / இந்த ஆண்டு சுமார் 54000 கோடி ) வெகுவாகபாராட்டினார்.

அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதை பற்றியும் குறிப்பாக திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி சிறப்பான முறையில் கல்வி கற்பிப்பதையும் தொடர்ந்து 10 வகுப்பில் முழு தேர்ச்சி அடைந்து வருவதை பற்றி குறித்து ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி பேசினார். விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் பள்ளியின் இருபால் ஆசிரிய பெருமக்கள் செய்திருந்தனர். இறுதியில் உதவி தலைமையாசிரியை
திருமதி.ஃபெசியானா லூர்து மேரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.














