
இன்று சோகூர், போரசு சிட்டி கடற்கரை புறவெளித் தளத்தில் நான் நடத்தி வைத்த இனிய நற்றமிழ்த்திருமணம்.
மணமக்கள் கலையரசன் கோவழகி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!
திருக்குறள் ஓதல்
பெற்றோரின் வாழ்த்தைப் பெறல்
திருக்குறள் மீது உறுதிமொழி கூறி மணமாலை அணிவித்தல்
மங்கல நாண் அணிவித்தல்

மலர் தூவி வாழ்த்தல் என திருக்குறள் ஓதி விளக்கம் செய்யப் பெற்று இத்திருமணம் பெற்றோர் உற்றார் உறவுகள் பெரியோர் பலரும் மகிழ இனிதே நடைபெற்றது.
வாழிய செந்தமிழ் வாழ்க வாழ்க வாழ்க நற்றமிழர் வாழ்க வாழ்க
சுடர்தமிழ் நெறியினர் வாழ்க வாழ்க சூழ்புகழ் திருக்குறள் வாழ்க வாழ்க.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பியே வாழ்க பார்உயிர் சமன்மையைப் பேணியே வாழ்க
வீழ்ந்த நல்லினத்தினை மீட்டுமே வாழ்க விரிநிலம் போற்றவே வாழ்க வாழ்கவே
கலையரசன் கோவழகி எனும் அருந்தமிழ்ப் பெயர் சூட்டிய மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க!
இரா. திருமாவளவன்.















