
வாழ்த்துகள் அன்பு இளவலுக்கு!
அயலகக் கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன் (ஜப்பான்), லிமரிக் (ஆங்கிலம்) கஸல் (பாரசீகம்) நானிலு (தெலுங்கு) வடிவங்களைத் தொடர்ந்து அன்னைத் தமிழுக்கு பிரெஞ்சு இலக்கியக் கவிதை வடிவமான ‘வில்லனெல்லே’ என்கிற கவிதை அறிமுகம் ஆகிறது.
தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் அன்பு இளவல் முனைவர் ஜா.சலேத் ‘வில்லனெல்லே’ கவிதை குறித்த அறிமுகக் கட்டுரையையும், தமிழின் முதல் ‘வில்லனெல்லே’ கவிதையையும் மகாகவி இதழில் அறிமுகம் செய்துள்ளார்.
பேராசிரியர் அன்பு இளவல் முனைவர் ஜா.சலேத் அவர்களுக்கும், கவிதையை அறிமுகம் செய்த மகாகவி இதழாசிரியர் கவிஞர் வதிலை பிரபா* அவர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
முனைவர் ஞா.பெஸ்கி
தமிழாய்வுத்துறைத் தலைவர்
தூய வளனார் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.
