• Home
  • இந்தியா
  • கேரளா மாநில தலைச்சேரி பகுதியில் மரக்கன்று நடப்பட்டது.
இந்தியா

கேரளா மாநில தலைச்சேரி பகுதியில் மரக்கன்று நடப்பட்டது.

Email :310

கேரளா தலைச்சேரியில் மரக்கன்று நடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு திருச்சியில் பேங்க் வேலை ஆரம்பித்து பல மாவட்டம், பல மாநிலங்களில் வேலை பார்த்து விட்டு பணி ஒய்வு பெற்று  கேரளா மாநிலம் தலைச்சேரியில் வீடு கட்டி தற்பொழுது குடிப்புகுந்து உள்ளார் நண்பர் சாந்தகுமார்.

கடந்த 27.12.24 கார் பயணமாக குடும்பத்துடன் போத்தனூர் எனது நண்பர் ரெங்கநாதன் வீட்டிற்கு சென்று காலை உணவுவை முடித்து விட்டு பிறகு கேரளா தலைச்சேரி  சென்றும்.

கேரளாவில் 7மணி நேரம் பயணத்தில் ரோட்டில் எங்கும்,மாடு, ஆடு,நாய்கள் நடமாட்டம் இல்லாமாலும், ரோடு இரண்டு பக்கங்களிலும் குப்பைகள் இல்லாமல்  சுத்தமாகவும்,  மரங்கள் நிறைந்து மிகவும் பசுமையாகவும் இருக்கிறது.
வீட்டைச் சுற்றி பசுமையான சுற்றுசூழல் நிறைந்த, வயல்கள், அடர்ந்த செடி கொடிகள், மரங்கள் மற்றும் புதிதாக துளிர்க்கும் இலைகள், நாற்றம், குப்பைகள் இல்லாத சுத்தமான கடற்கரை பார்க்கும் போது நம்முடைய மனதில் ஒருவித பரவசம் அடைந்தேன்.
கிணறு நீரை பாதுகாக்க சுற்றி வலைகளை அமைத்து வீட்டுக்குள்ளே இருந்து தண்ணீர் இறைக்கும் வசதியாக அமைத்துள்ளார்கள்.  நமது ஊர் எப்பொழுது அப்படி வரும் என்ற ஏக்கத்துடன் பயணித்தேன்.

கேரளா நண்பர் சாந்தகுமார் வீட்டிற்கு  பயன் தரும் மரங்கள் பலா, மாதுளை, சீத்தா,கொய்யாகன்றுகள் உடன் வேம்பு மற்றும் நமது மாநில மரமான பனை விதைகளை எடுத்துச் சென்று நட்டு வந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts