பழங்குடியின பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறையின் மூலம்


இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணாக்கர்கள் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி திருச்சிராப்பள்ளி


ஓ ஓய் தொலைக்காட்சி கன்னிகா வணிக நிறுவனம் மற்றும் ஜிப்ஸி வெல்ஃபேர் ட்ரஸ்ட் இணைந்து திருவரம்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராய நேரி நரிக்குறவர் காலணியை சேர்ந்த பெண்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தன் தங்கிய பெண்களுக்கு மளிகை


பொருட்களுடன் கூடிய பல்பொருள் அங்காடி ஒப்படைக்கப்பட்டது மூலம் அவர்களின் பொருளாதார நிலை உயர வழி வகுக்க செய்யும் இந்நிகழ்ச்சியில் விரிவாக்க துறையின் இயக்குனர் அருட்தந்தை டி. சகாயராஜ் சே ச அவர்களின் தலைமையில் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் திரு ஆண்டனி பிரகாஷ் கலந்து கொண்டு விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் பல்வேறு துறைகளில் இன்று சிறு குறு வணிகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் நிறைந்துள்ளது,


அதனைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறவேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் முயற்சியை வெகுவாக பாராட்டினார் கல்லூரி மாணவர் மைக்கேல் பாலாஜி அரசு நலத்திட்டத்தையும் மாணவி மாணவர் ஆகாஷ் ஜெரி சுயதொழில் தொடங்குவது பற்றியும் விளக்கம் அளித்தார்கள்முன்னதாக திருச்சி ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி தலைவர் திரு பாலாஜியின் தலைமையில் சங்கத்தின் செயலர் திரு ஐயப்பன் கலந்து கொண்டு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு

இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற வாழ்த்தினார் தொடக்க உரையில் விரிவாக்க துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் லெனின் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சிகள் ஏற்பாடு செய்யவும் அந்த பயிற்சியை அளிப்பதற்காக அரசு அரசு சாரா அமைப்புகளுடன் மாணவர்களின் முயற்சியில் பயிற்சிகள் தர தயாராக உள்ளதை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் தமது பொருளாதார நிலையிலிருந்து மேம்பட வேண்டுமென்று கூறினார்.

முன்னதாக அருட் சகோதரி பவுலின் தெரசா வரவேற்றார் ஸ்ரீ ராஜேஸ்வரி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ஜிப்ஸி வெல்ஃபேர் ட்ரஸ்ட் இன் இயக்குனர் திரு ஜான் சிதம்பரம் கிராமத் தலைவர் திரு துரை மகளிர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் மூலம் மக்கள் இப்ப பழங்குடியின மக்களுக்கு மாணவர்களுக்கு மாலை நேர பள்ளியும் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் இளைஞர்கள் இளம் பெண்களின் தொழில்துறை பயிற்சிக்கும் வழி செய்திட வேண்டுமென்று கோரிக்கைகளை விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகள் நந்திதா நிவேதா தொகுத்து வழங்கினர் ஏற்பாடுகளை மாணாக்கர்கள் சைனி ஸ்டாலின் முஸ்கான் ஆகாஷ் நந்திதா குழுக்களோடு இணைந்து செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














