தமிழ்நாடு

துவங்கியது திருச்சி புத்தகத் திருவிழா!

Email :43

இன்று 14.2.26 மாலை 4 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.KN.நேரு அவர்களும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களும் துவக்கி வைத்தார்கள்.

140 அரங்குகள் லட்ச கணக்கான புத்தகங்கள் என பிரம்மாண்ட முறையில் கடந்த ஆண்டுகளை விட சிறப்பான ஏற்பாடுகளுடன் புத்தக கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

இன்று 14.2.26 முதல் வரும் 22.2.26 ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 வரை புத்தக அரங்குகள் திறந்து இருக்கும். மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செவிக்கு விருந்தாக கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், கதை சொல்லும் நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் விண்வெளி கூடம் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்சியின் பிரபல உணவகங்களின் ஸ்டால்கள் சிற்றுண்டிகள் என சிறப்பான முறையில் புத்தக கண்காட்சியை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட நூலக ஆணை குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே மாணவ மாணவியர் ஆசிரியர்கள் பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் வந்து பார்த்து நல்ல புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வி.வே.விஸ்வேஸ்வரன், திருஆனைக்கா

*துவங்கியது திருச்சி புத்தகத் திருவிழா*

இன்று 14.2.26 மாலை 4 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மரியாதைக்குரிய *மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன்* அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் *திரு.KN.நேரு* அவர்களும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் *திரு.அன்பில் மகேஷ்* அவர்களும் துவக்கி வைத்தார்கள்.

*140 அரங்குகள்* லட்ச கணக்கான புத்தகங்கள் என பிரம்மாண்ட முறையில் கடந்த ஆண்டுகளை விட சிறப்பான ஏற்பாடுகளுடன் புத்தக கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

இன்று 14.2.26 முதல் வரும் 22.2.26 ம் தேதி வரை தினமும் *காலை 10 மணி முதல் இரவு 9 வரை* புத்தக அரங்குகள் திறந்து இருக்கும். மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செவிக்கு விருந்தாக கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், கதை சொல்லும் நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் விண்வெளி கூடம் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்சியின் பிரபல உணவகங்களின் ஸ்டால்கள் சிற்றுண்டிகள் என சிறப்பான முறையில் புத்தக கண்காட்சியை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட நூலக ஆணை குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே மாணவ மாணவியர் ஆசிரியர்கள் பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் வந்து பார்த்து நல்ல புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

*வி.வே.விஸ்வேஸ்வரன், திருஆனைக்கா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts