திருச்சி புத்தகத் திருவிழா அரங்கு எண் 92-ல் நடைபெறும் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் அமைப்பு செயலாளர், கவிஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் மாணவர்களின் தன்னம்பிக்கை பேச்சாளராகப் புகழ்பெற்ற பேராசிரியர் கி. சதீஸ்குமார் அவர்களின் முயற்சியில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உள்ளது.
கவிஞர் பேரா. சதீஷ்குமரன் (எ) ஆநிறை செல்வன் எழுதிய “தாடி முளைத்த நெடும் பனை” மற்றும் கவிஞர் ஆங்கரை பைரவி எழுதிய “தனிமை நேரத்து தூண்டில்காரன்” ஆகிய கவிதை நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மதிப்புமிகு பாலகிருஷ்ணன் I.A.S., கவிஞர் கோ. கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட உள்ளனர்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணிக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பேரா. கி. சதீஸ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.சி.நீலமேகம், செயல்தலைவர்,
தண்ணீர் அமைப்பு.
மாநில பொருளாளர், மக்கள் சக்தி இயக்கம்.














