• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரி வழியாக சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரி வழியாக சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி!

Email :57

செயின்ட் ஜோசப் கல்லூரி வழியாக சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு; உன்னத பாரத இயக்கத்தின் கீழ் சேவை செய்யும்; கிராமங்களில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் அமைந்துள்ள நம்மாழ்வார் சூழலியல் அறக்கட்டளை வானகம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

கல்லூரியின்; முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின்  வழிகாட்டுதலின் படி செப்பர்டு விரிவாக்கதுறையின் இயக்குனர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச பயிற்சிக்கு தலைமை தாங்கினார் நம்மாழ்வார் சூழலியல் அறக்கட்டளையின் நிர்வாகி திரு கரிகாலன் பயிற்சியாளர் திரு மருதையப்பன்   அவர்கள் நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சியில் மண் பாதுகாப்பு  இயற்கை வழி வேளாண்மை செய்யும் முறை, உரத் தயாரிப்பு, பூச்சி கட்டுப்பாடு இயற்கை வேலி அமைப்பு நஞ்சு இல்லா உணவு, பாரம்பரிய அரிசி ரகங்கள் சாகுபடி மற்றும் விதைகள் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியவைகளை நேரடியாக பயிற்சி கொடுத்தார். இப்பயிற்சியில் பங்கு பெற்ற விவசாயிகள் பாரம்பரிய அரிசி ரகங்களை இயற்கை வழியில் வேளாண்மை செய்திதிருக்கும் நெல் வயல்களையும் இயற்கை வேலி அமைத்துள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் செப்பர்டு விரிவாக்க துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் விரிவாக்கத்துறையின் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசீலன் நன்றி கூறினார் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா திருமதி யசோதை திரு சுதாகர் மற்றும் அலுவலக உதவியாளர் திரு அமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்களப்பயிற்சிக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை ஒன்றியம் ஆகிய பகுதியிலிருந்து சிறு குறு விவசாயிகள் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் இயற்கை வழி வேளாண்மை செய்வதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts