
திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீ அகாடமி நிறுவனம் மற்றும் திருச்சி எம். ஐ. இ. டி. கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஸ்ரீ அகாடமி நிறுவனத்தின் தலைவர் அருண்குமார் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். அவர் தன்னுடைய உரையில் மாணவ பருவத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம். ஐ. இ. டி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் நவீன் சேட் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி வழிகாட்டி பகுப்பாய்வாளர் அஸ்வின் ராமசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு எதிர்கால உயர்கல்வி வழிகாட்டலைப் பற்றி எடுத்துரைத்தார்.
இறுதியாக ஸ்ரீ அகாடமி நிறுவனத்தின் மேலாளார் Rதிவ்யா நன்றியுரை கூற விழா இனிதே முடிவுற்றது.













