
திருச்சிராப்பள்ளி, வாசகர் வட்டத்தின் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோர் முற்றம் டிசம்பர் மாதக் கூட்டம் 18.12.2024 இன்று மாலை மைய நூலக இரண்டாவது தள கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் வீ. கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் “நேர்படப் பேசு” என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து உரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் நிர்வாகிகள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்,

ஆசிரியைகள், பேராசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட மைய முதல் நிலை நூலகர் தனலட்சுமி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.














