

இன்று 19.12.2024 திருச்சி திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 77ஆவது வாசகர் வட்டம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.செஸ்லி, (தமிழ் ஆசிரியர் ஆரோக்கியமாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி)அவர்கள் கலந்து கொண்டு எனக்குள் நான் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்பான உரை அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நமது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்து தமிழ் திசை பத்திரிக்கை இன்றைய இதழை வழங்கியது.


இன்றும் நாளையும் கணித மேதை ராமானுஜன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இந்து தமிழ் திசை பத்திரிகை சிறப்பிக்கும் பொருட்டு இன்றும் நாளையும் நமது நூலக வாசகர் வட்டம் கேட்டு கொண்டதற்கிணங்க வழங்கி சிறப்பித்தனர்.
இந்து தமிழ் திசை பத்திரிகைக்கும் அதன் மேலாளர் திரு. மனோஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


மேலும் ஒலி ஒளி பதிவு செய்து வழங்கிய திருச்சி ஃபாஸ்ட் நியூஸ் திரு. பாபு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.














