வானவில் மன்றம் மற்றும் NK குடியிருப்பு மாலை நேர கல்வி மையம் திருவரம்பூர் கிளை இணைந்து நடத்திய கிராம அறிவியல் திருவிழா, 26.12.2024 துவாக்குடி NK குடியிருப்பில் நடைபெற்றது.

விழாவில் சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பங்கேற்பு செய்தார்கள்.
இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த மாலை நேர கல்வி மையம் ஆசிரியர் திருமிகு.கிறிஸ்டினா அவர்கள் விழாவை முன்னின்றி வழி நடத்தினார்.
நிகழ்வில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள், தேசத்தலைவர்களின் முகமூடிகள் பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல் வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கி குழந்தைகளை உற்சாகமூட்டினார்.

திருவரம்பூர் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் திரு.பகுத்தறிவன்.க அவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், அறிவியல் அற்புதங்கள், மந்திரமா தந்திரமா, மெட்ரிக் மேளா ஆகிய தலைப்பின் கீழ் குழந்தைகளின் பங்கேற்புடன் நிகழ்வை கொண்டு சென்றார்.

தமிழ்நாடு முழுவதும் 710 இடங்களில் இன்று இரண்டாவது நாளாக கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் தகவலை கூறி, இது போன்ற கிராம அறிவியல் திருவிழாவை நடத்தி பொதுமக்களிடமும்

குழந்தைகளிடமும் அறிவியல் சிந்தனையை மேம்படுத்தக்கூடிய செயல்களை செய்கின்ற தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும், நிகழ்வில்

பங்கேற்பு செய்த குழந்தைகளுக்கும், மாலை நேர கல்வி மைய ஆசிரியருக்கும் கிராம அறிவியல் திருவிழா சார்பாக நன்றியை தெரிவித்தார்.














