

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று 26.12.2024 சிறுவர்களுக்கான “திருக்குறளில் ஐந்து அதிகாரங்கள் ஒப்புவிக்கும் போட்டி” நடைபெற்றது.
போட்டியில் 159 சிறுவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மு.யா. மர்ஜிக்கா முதலிடத்தையும், அ. ஆசியா இரண்டாம் இடத்தையும், த. ஹர்ஷிகாஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து இப்போட்டியினை நடத்தினர்.


நிறைவில் மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சு. தனலெட்சுமி நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து 28.12.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வினாடி-வினாவும், 30.12.2024 மற்றும். 31.12.2024 ஆகிய நாட்களில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சு.தனலெட்சுமி,
முதல் நிலை நூலகர்,
மாவட்ட மைய நூலகம்,
திருச்சிராப்பள்ளி.
அலைபேசி: 93447 54036

