• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளியில் உலக தண்ணீர் தின சிறப்பு நிகழ்வு!
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளியில் உலக தண்ணீர் தின சிறப்பு நிகழ்வு!

Email :179

திருச்சிராப்பள்ளியில் உலக தண்ணீர் தின சிறப்பு நிகழ்வு!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட சூழலியல் உபகுழுவும், ஜமால் முகமது கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இணைந்து இன்று 22.03.2025 (சனிக்கிழமை) இந்தியன் வங்கி காலனியில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தின சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைத் தலைவரும், சூழலியல் உபகுழு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.மு.சலாஹூதீன் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளி துணை முதல்வர் திருமிகு.கே.மீனா அவர்கள் முன்னிலை வைத்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அறிமுக உரையாற்றினார்.

கருத்தாளராக மாவட்ட இணைச் செயலாளர் திரு.க.பகுத்தறிவன் அவர்கள் அறிவியல் பாடல் பாடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடி, தண்ணீர் சம்பந்தமான பரிசோதனைகள் செய்து காண்பித்து விளக்கம் அளித்தார்.

ஜமால் முகமது கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்திலிருந்து கல்லூரி மாணவர் திரு.தல்ஹா யாசிர் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் சம்பந்தமான செயல்பாடுகள் செய்து காண்பித்து விளக்கம் அளித்தார்.

நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சூழலியல் உபகுழு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளருமான திரு.கோ.ஹரிபாஸ்கர் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts