திருவானைக்கோவில் சன்னதி தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள், இணைந்து நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் திரு. சிவக்குமார் நீர் மேலாண்மை குறித்து விளக்கினார்.

ஆசிரியை சக்தி தேவையற்ற நீர் வீணாவதை தடுப்பது பற்றியும், ஆசிரியை பெலிஸ்டா மேரி பிளாஸ்டிக் மற்றும் வேதிப்பொருட்கள் நீரை மாசுபடுத்தும் பாதிப்புகள் பற்றியும் அறிவுறுத்தினர்.
மாணவர்கள் நீர் பாதுகாப்பு குறித்த கதைகள் சொல்லி, ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவர்கள் “நீர் வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்” என உறுதிமொழி எடுத்தனர்.
இல்லம் தேடி தன்னார்வலர் எம். சுகாசினி மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் ஜோதிப்ரியா மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர்.













