• Home
  • தமிழ்நாடு
  • குழந்தைகள் கலை விழா – நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவி தெரு, ஸ்ரீரங்கம்.
தமிழ்நாடு

குழந்தைகள் கலை விழா – நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவி தெரு, ஸ்ரீரங்கம்.

Email :127

குழந்தைகள் கலை விழா – நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவி தெரு, ஸ்ரீரங்கம்.

நிகழ்வு சுருக்கம்:
நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவி தெரு, ஸ்ரீரங்கத்தில் குழந்தைகள் கலை விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சித் தொடக்கம்:

பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.

அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் பள்ளியின் சேர்க்கை குறித்தும், எட்டாம் வகுப்பு முடித்த அனைவரும் ஒன்பதாம் வகுப்பில் சேர வேண்டும் என்பதையும் அறிவுரை வழங்கினார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் எஸ்.சிவகுமார், கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனை மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன என தெரிவித்தார்.

பங்கேற்பாளர்கள் மற்றும் பாராட்டுரை:

வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மீனா, பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவில் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றதை பாராட்டினார்.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் செல்வி, ராதா, பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா, வினிதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

ரோட்டரி சீனிவாசன், தலைமை ஆசிரியர் சைவராஜ், சக்தி, பெலிசிட்டா மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கராத்தே மாஸ்டர் சக்திவேல், அறிவியல் இயக்க உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts