• Home
  • தமிழ்நாடு
  • உலக தண்ணீர் தினம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

உலக தண்ணீர் தினம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

Email :138

சண்முகா நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்

உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு பயிற்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சண்முகா நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர்  துரை. ஜெயபாக்கியம் கூறியதாவது
விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. விலங்குகளில், தண்ணீர் உணவு செரிமானம், ஊட்டச்சத்து பரிமாற்றம் மற்றும் உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. தாவரங்கள் சூரியஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலமாக உணவு தயாரிக்க தண்ணீரை பயன்படுத்துகிறது.

மேலும், தண்ணீர் தாவரங்களில் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தண்ணீர் இல்லாமல் விலங்குகளும் தாவரங்களும் வாழ முடியாது, எனவே இது மிக முக்கியமான இயற்கை வளமாகும்  என்றார்.

ஆசிரியை ஜெயந்தி குழந்தைகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தார். நீரின் முக்கியத்துவத்தை உணர வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் எஸ்.சிவகுமார், நீரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு விளக்கம்  அளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி என் சித்ரா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts