• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் யூத் ஃபார் சயின்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்!
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் யூத் ஃபார் சயின்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்!

Email :198

திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் யூத் ஃபார் சயின்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்!
இன்று 23.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) திருச்சிராப்பள்ளி இந்தியன் வங்கி காலனியில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் யூத் ஃபார் சயின்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் திரு.மு.தியாகராஜன் அவர்கள் தலைமை ஏற்றி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத் தலைவர் திரு.ஜான்சன் பிரான்சிஸ், மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலில், யூத் ஃபார் சயின்ஸ் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆ.யோகலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநிலச் செயலாளரும், யூத் ஃபார் சயின்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு.வி.ராமமூர்த்தி அவர்கள் மூன்று மாதத்திற்கான எதிர்காலப் பணிகளை முன்வைத்து பேசி, கூட்டத்தை ஒருங்கிணைத்தார். 12 மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்கள் என 16 பேர் கலந்து கொண்டனர்.   
நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட பொருளாளருமான திரு.ச.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts