• Home
  • தமிழ்நாடு
  • தென்றல் நகர் கிளை நூலகத்தில் 22.03.2025 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

தென்றல் நகர் கிளை நூலகத்தில் 22.03.2025 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Email :163

தென்றல் நகர் கிளை நூலக வாசகர் வட்ட பெருமக்களே! தென்றல் நகர் கிளை நூலகத்தில் 22.03.2025 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு பெண்களுக்கு பல அறிவுசார் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் திரளாக பல பெண்கள் கலந்து கொண்டனர்.அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது.நமது வாசகர் வட்ட தலைவர் திரு .ஆனந்த் அவர்கள் தலைமையேற்க வாசகர் வட்ட துணை தலைவர் திரு.ஹென்றி டேவிட் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

அதைத்தொடர்ந்து எங்களது ஆளுமைகளான பெண் சிங்கங்கள் திருமதி .மலர்விழி ராஜேந்திரன்,திருமதி.மனோன்மணி சுந்தராஜன்,திருமதி.பரிமளா ராமானுஜம்,திருமதி.பூமா ராமநாதன்,திருமதி.தனலெட்சுமி பாஸ்கரன்,திருமதி.சத்யா ராஜேந்திரன் திருமதி.பிரியா சண்முகம்,திருமதி.ஷகிலா பேகம்,திருமதி.முருகேஸ்வரி  ஶ்ரீனிவாஸ், திருமதி.கிருத்திகா சக்தி ஆகியோர் சிறப்புரை ஆற்ற ஆளுமைகளுக்கு பல வருட நூலக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது.வாசகர் வட்டத்தை சேர்ந்த திரு.அய்யம் பிள்ளை,திரு.கவுஸ் மொய்தீன்,திரு.நாகநாதன்,திரு. ஶ்ரீனிவாஸ்,திரு.செந்தில் குமார்,திரு.ஜாவித்

உசைன்,திரு.குணவழகன்,திரு.ராஜ்குமார்,திரு.தியாகராஜன்,திரு.சுப்ரமணியன்,திரு.முத்து ஆகியோர் பெண்ணின் பெருமைப் போற்ற அவர்களுகக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார் நமது வாசகர் வட்ட தலைவர் திரு.ஆனந்த் அவர்கள், 15 வருட நூலக சேவைக்காக ஐயப்ப நகர் வாசகர் வட்ட மங்கையர்களுக்கு விருது வழங்கி பெருமைப் படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக போட்டியில் வெற்றி பெற்ற வீரமங்கைகளுக்கு எங்கள் 64 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மலர்விழி ராஜேந்திரன் அம்மா மற்றும் எங்கள் பெண் சிங்கங்கள் அறிவுசார் தனிதிறன் வெற்றியாளர் விருது வழங்கி கௌரவித்தது சிறப்பு.

நிகழ்விற்கு காரணகர்த்தாவாக இருந்த எங்கள் அன்பு நூலகர் திருமதி.ஷகிலா பேகம் அவர்கள் நன்றியுரை நல்க.நிகழ்ச்சியை திருமதி.சத்யா ராஜேந்திரன் மற்றும் திருமதி.முருகேஸ்வரி ஶ்ரீனிவாஸ் தொகுத்து வழங்கினார்கள்.நிறைவாக நாட்டுப்பண் பாட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவிய இயற்கைக்கும்,இறைக்கும்,குருவிற்கும் , அனைத்து நல் உங்களுக்கும் நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts