இளைஞர்களை ஈரோடு தமிழன்பன் போல படைப்பாளராக உருவாக்க வேண்டும்.
காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் உறுதியேற்பு!

சாகித்திய அகாதெமி விருத்தாளரும் எண்ணற்ற நூல்களைத் தமிழில் எழுதியுள்ளவருமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவையடுத்து திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் நம் கால மகாகவி ஈரோடு தமிழன்பன் என்னும் பொருண்மையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. ஜமால் முகமது கல்லூரி மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் அசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர்கள் ஜோசப் சகாயராஜ், ஜான் கென்னடி, லயன் முகமது ஷபி, வழக்கறிஞர் ரெங்கராஜன், யோகா விஜயகுமார், கவிஞர் கலியமூர்த்தி, எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, கவிஞர்கள் சேது மாதவன், வாழையூர் குணா, ராஜ ராஜ சோழன், ஹரிகரன் நந்தவனம் சந்திரசேகரன், பிரான்சிஸ் ஆன்டனி, ஆன்ஸ்டின் ஜோ, அரசெழிலன், பொற்கொடி, முகமது அபுபக்கர் சித்திக், கல்வியாளர் ஜெயலட்சுமி, உள்ளிட்ட பலர் பங்கேற்று கவிஞரின் நினைவலைகளை உரையாகவும் கவிதையாகவும் வழங்கினர். நிறைவில் ஈரோடு தமிழன்பனின் தொடர் உழைப்பு அவரை பெரிய படைப்பாளராக அடையாளப்படுத்தியது.

அதுபோல இளைஞர்களை நாம் சமூகத்திற்கான படைப்பாளர்களாக உருவாக்க வேண்டும் என உறுதி ஏற்றனர். முன்னதாக முனைவர் அந்தோணி ராஜா வரவேற்றார். நிறைவில் மெர்சி டயானா நன்றி கூறினார்.

ஆசிக் டோனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவிஞர் திருவைகுமரன், முனைவர் ஜா. சலேத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.














