கல்லூரி மாணாக்கர்களுக்கான சுகாதாரம் உடல் மற்றும் மனநல பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுகாதாரம் உடல் மற்றும் மனநல பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில்; இணை முதல்வர் முனைவர் குமார் சமூகத்தோடு இணைந்து கல்வி மற்றும் சமூகப்பணியை செய்வதன் மூலம் தங்களின் சமூக அறிவையும் சமூதாய வளர்ச்சியையும் திறம் பட மேம்படுத்தலாம் என்றும் தனது கல்லூரி நாட்களில் செப்பர்டு சமூகப்பணி அனுபவங்களை எடுத்துக்கூறினார்.

விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தமது தொடக்கவுரையில் மாணக்கார்கள் தாங்கள்; கற்றறிந்த அறிவை சேவை செய்யும் மக்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் மாணவர்களின் சிந்தனையும் எண்ணங்களும் செயல்களும் கிராமத்தின் வளர்ச்சியுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விரிவாக்கத்துறையின் முது நிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயச்சந்திரன் நிலையான வளர்ச்சி இலக்குககில் உலகளாவிய நலவாழ்வுக்கான பதினேழு இலக்குகளை சமூதாய பணிகளில் செயல்படுத்துவதன் மூலம் நாடு தன்னிறைவு பெறம் என்று விளக்கி கூறினார்.

சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு வானியல் மற்றம் அறிவியல் இயக்க மாநிலச் செயலர் திருமதி சாந்தி உடலாலும் உள்ளத்தாலும் சமூதாய அளவிலும் நோய் இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியம் என்றும் சுகாதார கல்வி பற்றிய முழு அறிவினையும் பாதுகாப்பான குடிநீரையும் மாசற்ற சுற்று சூழலையும் சத்தான உணவு முறைகளையும் கடைபிடித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு அளிப்பதின் மூலம் ஆரோக்கியமான சமூகம் அமைய வழிவகுக்கும் என்று சிறப்புறையாற்றி மாணாக்கர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கல்லூரியின் இணையதள நிர்வாகி திரு ரொசாரியோ இளநிலை ஒருங்கிணைபாளர்கள் திரு ஜெயசீலன் மற்றும் திரு சுதாகர் அறிக்கை தயார் செய்யும் வழிமுறைகளையும் அதனை இணையதள வழியில் சமர்பிக்கும் முறைகளையும் எடுத்துக் கூறினார்கள்
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் வந்தவர்களை வரவேற்றார். முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை நன்றி கூறினார்.

திரு ஜோசப் கிறிஸ்து ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் தொழில் நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் திரு அமலேஸ்வரன் செய்திருந்தார் சுகாதாரம் மற்றும் உடல்நலம் பற்றிய விளக்கப்பட கண்காட்சி நடைபெற்றது.


பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சுகாதாரகுழுவின் மாணாக்கர்கள் 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.














