அகழ் கலை இலக்கிய மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழாவை முன்னிட்டு, முப்பெரும் விழா பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அகழ் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் செ.வினோதினி வரவேற்புரை வழங்கினார்.

விருத்தாச்சலத்தில் தமிழ்ப் பல்லவி காலாண்டு இதழை நடத்தி வரும் திரு. பல்லவிகுமார் அவர்கள், தமிழக மாதிரி பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜபாண்டியன் அவர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவையின் செயலாளர் திரு. கி.முகுந்தன் அவர்கள் தலைமை வகித்தார். பெரம்பலூர் தேவராஜ் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மருத்துவர் திருமதி. புவனேஸ்வரி அவர்களும், பெரம்பலூர் மலர் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மருத்துவர் திரு. பி. விஜய் ஆனந்த் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யா மற்றும் செயலாளர் திரு. செ. சுதா போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகழ் குழுமத்தின் செயலாளர் சி. ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.
அகழ் குழும செயலாளர்கள் ச. ஜெய் பிரகதி மற்றும் தேவி போன்றோர் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
பிறகு “புத்தகம் ஓர் உலகம்” என்ற தலைப்பில் கவியரங்கமும், தமிழின் பெருமைகளை சொல்லும் கருத்தரங்கமும், புத்தக ஆய்வினை உள்ளடக்கிய இலக்கிய அரங்கமும் நடைபெற்றது. கவியரங்கத்திற்கு பாவலர் திரு. முத்தரசன் அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர்கள் கவிச்சிட்டு வேல் இளங்கோ, அகவி, ராமர், சாரங்கபாணி, பெரியசாமி, போன்றோர் புத்தகத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் கவிதையை வாசித்தார்கள்.
இலக்கிய அரங்கில் எழுத்தாளர் ச. மோகன் எழுதிய “கண்ணாட்டி” என்ற புத்தகத்தை, எழுத்தாளர் இ. தாகிர் பாஷா அவர்கள் மதிப்பாய்வு செய்தார். எழுத்தாளர் நிழலி எழுதிய “இன்னும் முளைக்காத காடு” என்ற புத்தகத்தை, திருச்சி மாவட்டத்தின் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் மதிப்பாய்வு செய்தார்.
இலக்கிய அரங்கிற்கு பேராசிரியர் க. தமிழ்மாறன், வரலாற்று ஆசிரியர் ஜெயபால் ரத்தினம் போன்றோர் தலைமை வகித்தனர்.
கருத்தரங்கத்தில் ஆசிரியர் செல்வாம்பாள் தலைமையேற்றார். பேராசிரியர்கள் ரா. உமா, ஸ்ரீசுபாஷினி, ஆசிரியர் மலர்கொடி, மாணவர்கள் இ. பூபாலன், ப. சிவாஜி போன்றோர் பங்கு கொண்டு திருக்குறள், நாலடியார், ஐங்குறுநூறு, திருகடுகம் போன்றவற்றில் இருக்கும் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழாவினை ஒட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில், கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகளை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன், சென்னை மாவட்டத்தை சேர்ந்த ரமேசு எத்திராசன், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கௌதமி ராஜா போன்றோர் பெற்றார்கள்.
கவிதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருமதி தனலட்சுமி, திருமதி நிர்மலா குமார், திருமதி சரஸ்வதி ஐயப்பன் போன்றோர் பெற்றனர்.
ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழாவினை ஒட்டி நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு, அறத்துப்பாலின் அனைத்து குறட்பாக்களையும் மனனமாக சொல்லி 2000 ரூபாய் ரொக்க பரிசு, சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை ராஜபாளையம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ம. சிவஸ்ரீ வென்றார்.
மேலும் குழந்தைகள் பூரண நித்திலன், ரித்திக் ஷா, ரவிதேஜ், சி.அபிராமி, சாய் சங்கரன், பூ. ரக்ஷன் போன்ற குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டியில் கலந்து கொண்டதற்கான பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மேலும் அகழ் சிறுவர் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுமைகளால் துவங்கப்பட்டது.
அகழ் மாதாந்திரப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை மாவட்டத்தை சேர்ந்த வெ. பாலமுருகன் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த மு. கோபிகா போன்றோர்கு “சொல் ஆர்வலர் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இறுதியாக வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் கும்மி மாணவர்களின், ஒழுக்கம் உடைமை அதிகாரத்திற்கான கருத்தை சொல்லும் மேடை நாடகம் நடைபெற்றது. மேடை நாடகத்தை ஒயில் கும்மி குழுவினரின் பயிற்சியாளர் திரு. நல்லமாணிக்கம் மற்றும் திருமதி. கலையரசி போன்றோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள். மேடை நாடகத்தில் மாணவ மாணவிகளான பார்கவி, துர்கா, மானசா, நிவேதா, சிவசங்கரி, மகதி, விக்னேஸ்வரன், சக்தி, சஞ்சய், சைலேஷ்வரன், போன்றோர், ஒழுக்கமுடைமையின் மேன்மையைச் சொல்லும் நாடகத்தை மிகச் சிறப்பாக நடித்தனர். அகழ் குழும செயலாளர் ஸ்ரீகாந்த் அவர்களின் நன்றி உரையோடு விழா இனிதே நிறைவுற்றது. பெரம்பலூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெருந்திரளாக, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் போன்றோர் வந்து கலந்து கொண்டனர்.













