தமிழ்நாடு

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Email :113

  தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கதிரேசன், துணைச் செயலர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக   திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி, சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முடக்குனர் மெர்லின் கோகிலா, அரிமா ஹேமலதா, ஆசிரியை பொன்னரிசி மேரி உள்ளிட்டோர் பங்கேற்று  பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts