இந்தியா

குட்டி விரல்கள் ஓவியக் கண்காட்சி!

Email :432

குட்டி விரல்கள் ஓவியக் கண்காட்சி!
நேற்று பாண்டிச்சேரியில் குட்டி விரல்கள் குழந்தைகள் ஓவியக் கண்காட்சியில்

குழந்தைகளின் ஓவியங்கள் பாண்டிச்சேரி பொம்மையார் பாளையத்தில் கூழாங்கல் நூலகத்தில்  நடைபெற்றது.


பெரும்பாலும் நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த உடன் ஓவியம் வரைவதை நிறுத்திவிடுகிறோம். ஆனால் உளவியல் அடிப்படையில் ஓவியங்கள் நம் கற்பனைத் திறன், மன மகிழ்ச்சி, சிந்தனைத் திறன் ஆகியவற்றுடன் நெருங்கியத் தொடர்புடையது. இத்தகைய கலையினை நம் வாழ்வியலில் ஒரு அங்கமாகக் கொண்டு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் குழந்தைகள் ஓவியம் வரையும் சூழல், குழந்தைமை ஓவியம், இதனை ஊக்கமூட்டும் வழிமுறைகள் ஆகியவைக் குறித்து உரையாடல் நடைபெற்றது.


இந்நிகழ்வில் குழந்தை ஓவியர்கள் அமிழ்தினி, ஆத்யா,  மழையாள், சஷ்டிகாஸ்ரீ, தாரா, வியல் ஆகியோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஓவியர்கள் சின்மயா, செந்தில் செல்வன், ப்ரிட்டோ ஆகியோர் குழந்தைகளின் ஓவியங்கள் குறித்து உரையாடினர்.


எழுத்தாளர் சாலை செல்வம் அவர்கள் ஒருங்கிணைப்பில்  அருவி, ஆலீஸ், கார்த்திகா கவின்குமார்,  பத்மினி, ப்ரீத்தி, பெரியார் தம்பி ஆகியோர் பெற்றோரியம்  குறித்தும், குழந்தைமை குறித்தும், குழந்தைகளின் ஓவியத் திறன் குறித்தும்  உரை நிகழ்த்தினர்.


இந்நிகழ்வினைத் தொடர்ந்து இளம் ஓவியரும், படைப்பாளருமான நிலா அவர்களின் ஒருங்கிணைப்பில்   உருவகேலி (body shaming) குறித்து பதின் பருவத்தினரிடம் உரையாடல் நிகழ்த்தப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள இளையோர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts