திருச்சி மாநகரம் சுப்ரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி புளோரா தலைமையில் இன்று 19.11.2024 நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகளான வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமைகள் மற்றும் குழந்தை உரிமையும் மனித உரிமையே என்பது குறித்தும்

குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள அரசு அமைப்புகளான மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழுமம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு குழந்தைகள் உதவி மையம் மண்டல

அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு குழந்தை நல காவல் அலுவலர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
