• Home
  • தமிழ்நாடு
  • திருச்சியின் புகழ் பொன்மலையின் அடையாளம் கட்டை பேட் பூப்பந்தாட்ட போட்டி மின்னொளியில்!
தமிழ்நாடு

திருச்சியின் புகழ் பொன்மலையின் அடையாளம் கட்டை பேட் பூப்பந்தாட்ட போட்டி மின்னொளியில்!

Email :92

திருச்சியின் புகழ் பொன்மலையின் அடையாளம் கட்டை பேட் பூப்பந்தாட்ட போட்டி மின்னொளியில்!  பொன்மலை நண்பர்கள் குழு நடத்தும் நான்காம் ஆண்டு இரவு நேர மின்னொளி திருச்சி புகழ் பொன்மலை அடையாளம் கட்டை பேட் பூப்பந்தாட்ட போட்டி  எப்ரல் 12,13,14 மூன்று நாட்கள்  நமது பொன்மலை ஆர்மரிகேட் கலையரங்கம் திடலில்  நடைபெற்றது.

அதில் முதல் நாள்  சிறப்பு  அழைப்பாளர்  46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ்,எஸ்.ஆர்.எம்.யூ தலைமை கிளை செயலாளரும், லோன் சொசைட்டி இயக்குனருமான எஸ்.விஜயகுமார், ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத்தார்கள். ஜவர் ஆட்டத்திற்கு 12 அணியும்,  இருவர் ஆட்டத்திற்கு 17 அணியும் கலந்துக் கொண்டார்கள். இருவர் ஆட்டத்தில் ஜில் பாட்னர் அணி முதலிடம்(28), ஆண்ரூஸ் பாட்னர் (22)அணி இரண்டாம் இடம், சாமி பாட்டர் (28) முன்றாம் இடம் பெற்றார்கள். ஐவர் ஆட்டத்தில் சிவா பாட்னர் (28) முதல் இடம், சாமி பாட்னர் (27) இரண்டாம் இடம், 7 ஸ்டார் பாட்னர் (28) முன்றாம் இடம் பெற்று பரிசுகளை பெற்றார்கள். வெற்றி பெற்றவருக்கு தொழிலதிபர் ஏ.ரிச்சர்ட், 46வது வார்டு மாமன்ற உறுப்பி உறுப்பின்ர் கோ.ரமேஷ் பரிசுகளை வழங்கினார்கள். இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், கொட்டப்பட்டு திருநாவுக்கரசு, கட்டை பேட் ஆறுமுகம், ரவீந்திரன், கணேஷ். ஜீவானந்தம், செல்வம், ஆரோக்கியம், ஆனந்து மற்றும் பெண்கள் குடும்பத்துடன், பலர் ஆர்வத்தில் பார்த்து ரசித்தார்கள்.
இந்த கட்டை பேட் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள்  மூன்று தலைமுறையாக விளையாடும் சிறந்த விளையாட்டு, வேறு எங்கும் காணமுடியாத விளையாட்டு இது.  
கே.சி.நீலமேகம்,
மக்கள் சக்தி இயக்கம் பொன்மலை,
திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts