• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இன்று 29.11.2024 புதுப் பொலிவுடன் எஸ் எம் ஜார்ஜ் கலையரங்கம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இன்று 29.11.2024 புதுப் பொலிவுடன் எஸ் எம் ஜார்ஜ் கலையரங்கம் திறக்கப்பட்டது.

Email :243

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இன்று 29.11.2024 புதுப் பொலிவுடன் எஸ் எம் ஜார்ஜ் கலையரங்கம் திறக்கப்பட்டது.

கலையரங்கத்தை அருள்தந்தை சின்னப்பன் அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்கள், கல்லூரியினுடைய செயலர் தந்தை அருள் பணி லூயிஸ் பிரிட்டோ அடிகளார் தலைமை வகித்தார்கள்.


உடன் கல்லூரியினுடைய மேனாள் செயலர் தந்தை அருள்பணி சூசை அலங்காரம் அடிகளார் பங்கேற்றார்கள் .கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.நடராஜன் அவர்கள் முன்னிலை வைத்தார், வரவேற்புரை ஆற்றினார்.

கலையரங்கம் 18 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்திய பண்பாட்டை தமிழகப் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக தமிழருடைய செவ்வியல் கலை பரதநாட்டியம் தொடங்கி இந்தியாவினுடைய எட்டு வகையான செவ்விகள் நடன முத்திரைகள் மற்றும் தமிழ்நாட்டின் இசைக்கருவிகள் நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற நடன

வடிவங்கள் மட்டுமல்லாது திருச்சியினுடைய அடையாளமாக இருக்கக்கூடிய மலைக்கோட்டை லூர்து மாத அன்னை ஆலயம் நத்தர்ஷா பள்ளிவாசல் திருவள்ளுவர் வள்ளலார் பாரதியார் மகாத்மா காந்தி மற்றும் தாஜ்மஹால் தஞ்சை பெரிய கோயில் மாமல்லபுரம் கிராமத்து பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக கிராமத்து சாலை தமிழர்ப் பண்பாட்டு அடையாளமாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மற்றும் திருச்சியினுடைய மிக முதன்மையான அடையாளமான கல்லணை பாரத மாதா உள்ளிட்ட ஆளுமைகளை வெளிப்படுத்தும்

விதமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள ஏழு சுரங்கலான தமிழிசை சுரங்கள் சரிகமபதநி வடிவங்கள் மற்றும் இந்திய பண்பாட்டின் மிக முதன்யாக இருக்கக்கூடிய யானை, அன்னம், நந்தி, யாளி, உள்ளிட்ட ப் படங்களை கொண்ட ஒரு அரங்கமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கமானது கலை பண்பாட்டு துறையின் மணிமண்டபமாக கலைத்துறையில் உள்ள மாணவர்கள் அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்ற ஒரு மிகச் சிறந்த அரங்கமாக திருச்சியில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சியில் கலை பண்பாட்டு துறைக்கு ஒரு அரங்கம் தமிழக பண்பாட்டையும் இந்திய பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று பங்கேற்ற அனைவரும் பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில் இந்த தமிழகப் பண்பாட்டை விளக்கும் விதமாக உள் அரங்கின் தனித்தன்மைக் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமார் அவர்கள் விளக்க உரையாற்றினார்.

உள்ளரங்கத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்த பொறியாளர் திரு ராபர்ட் அவருடைய குழுவினரை கல்லூரியின் செயலர் தந்தை அவர்கள் சிறப்பித்தார்கள்.

மாணவர்களுடைய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது நன்றியுரை முனைவர் ஜி. ஜெ .லீமாரோஸ் அவர்கள் ஆற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts