திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் இசைத்துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய இசை மருத்துவக் கழகம் நாதா பெங்களூர் அமைப்பும் கலைக்காவிரி இசைத் துறையும் இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
டிசம்பர் 1, 2, 3 , – 2024 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நேற்று பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்கப்பட்டு இன்றைய தினம் காலையில் சிறப்பு விருந்தினர், திருச்சியினுடைய இதய நோய் வல்லுநர் மருத்துவர் அஷ்ரப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை வைத்தார்.

முதல்வர் முனைவர் ப. நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்திய இசை மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் டி.வி. சாய்ராம் அவர்கள் நிகழ்வை வகுத்துத் தந்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவர் அஷ்ரப் அவர்கள் சிறப்புரையாற்றினார். இசை என்பது அழகியலாக மட்டுமல்லாமல் அது ஒரு மருத்துவமாக நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இன்னும் சமுதாயத்தில் இசையைக் கொண்டு பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ முறைகள் குறித்து விழிப்புணர்வை மருத்துவ துறைக்கும் சமூகத்திற்கும் பொது மக்களுக்கும் வளரும் தலைமுறைக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இங்கே பயில்கின்ற இசை மாணவர்கள் எதிர்காலத்தில் நோயில்லா சமூகத்தை உருவாக்க இசையை பயிற்றுவிப்பதோடு நோய் தீர்க்கும் மருத்துவ முறையிலும் அதை ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் இந்திய இசை மருத்துவம் என்கின்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டிற்கு இலங்கை ஜப்பான் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இசை ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் குறிப்பாக அஸ்ஸாம் ஒடிசா டெல்லி உத்தரகாண்ட் உத்தர பிரதேஷ் பஞ்சாப் குஜராத் ஹரியானா கேரளா தெலுங்கானா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இசை ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கானது இசைத்துறை சார்பாக நடத்தப்படுகிறது. இருபால் மாணவர்கள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.












