திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நடிகை மதுபாலா தலைப்பில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார் அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.

நடிகை மதுபாலாவிற்கு இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட குரு வடிவ அஞ்சல் தலையுடன், மதுபாலா திரைப்பட இயக்குனர்கள், பின்னணி பாடகர்கள் உட்பட பலருக்கு இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட நினைவார்த்த அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி விளக்கினார்.அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் தாமோதரன், மகாராஜா, ரமேஷ், மாதவன், முகமது சுபேர், சந்திரசேகரன், சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.