• Home
  • தமிழ்நாடு
  • பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.

Email :294

திருச்சி மாநகரம் திருவானைக்காவல் உயர்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமையில் நேற்று நவம்பர் 18ஆம் தேதி  நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள்

தினம் முன்னிட்டு குழந்தைகள் வீடு, பள்ளி சமுதாயம் முதலிய இடங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்தும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு வழங்கினார். நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழிப்புணர்வு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts