• Home
  • தமிழ்நாடு
  • 2024-25 ஆம் ஆண்டிற்கு தமிழகத்தில் 1197 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
தமிழ்நாடு

2024-25 ஆம் ஆண்டிற்கு தமிழகத்தில் 1197 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

Email :153

தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் புத்தாக்க அறிவியல் விருதுக்குத் தேர்வு. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் எட்வின் நிஷாந்த்ராஜ் புத்தாக்க அறிவியல் விருதுக்குத்(Inspire award )தேர்வு பெற்றுள்ளார்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிய இன்ஸ்பயர் அவார்ட் என்ற போட்டியினை நடத்துகிறது இதில் மாணவர்கள் தங்கள் புதுமைக்  கண்டுபிடிப்புகளை அரசுக்கு பள்ளியிலிருந்து பதிவு செய்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கண்டுபிடிப்புக்கருவிகள் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவுக்குத் தேர்வு செய்யப்படுவர். மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர் தேசிய அளவில் வெற்றி பெரும் மாணவருக்கு அரசு பரிசு வழங்குதோடு காப்புரிமையும் (பேட்டன்ட்) பெற்றுத் தருகிறது.

இளம் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பையும் ஊக்குவிக்கிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கு தமிழகத்தில் 1197 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .அதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் எட்வின் நிஷாந்த் ராஜ்  கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான எச்சரிக்கை தரக்கூடிய (smart glass for blind) கண்ணாடி தயாரித்துள்ளார். இக்கண்ணாடி எதிரில், தடைகள் இருக்கும் பொழுது ஒலி எழுப்பி மாற்றுத்திறனாளிகளை எச்சரிக்கை செய்து பாதுகாக்கிறது.
இந்த ஆய்வினை செய்வதற்காக அரசு ரூபாய் பத்தாயிரம் வழங்குகிறது.
தேர்வு செய்யப்பட்ட மாணவரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ,அறிவியல் ஆசிரியை ராபியா பஸ்ரி,ஆசிரியர்கள், மாணவர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.கடந்தாண்டு இனியவன் என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாண்டு எட்வின் நிஷாந்த்ராஜ் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் புத்தாக்க விருதுக்கு இப்பள்ளியிலிருந்து தேர்வு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts