
76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குமரேசபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருமதி
எம்.மீனாம்பாள், தலைமை ஆசிரியர் பொறுப்பு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் திரு டி.செல்வராஜ் மற்றும் திருமதி இ.ரூபா தேவி மாநில துணைத்தலைவர், திருமதி வா.ரேகா திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருமதி கவிக்குயில் திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மற்றும் திரு காசிநாதன் கல்வியாளர் அவர்களும் , திருமதி டி.மகேஸ்வரி புனித வளனார் நடுநிலை பள்ளி ஆசிரியர் மற்றும் திருமதி சுபத்ரா தேவி SMC தலைவர், திரு சரவணன் SMC உறுப்பினர், திருமதி பிரியா SMC உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய தலைவர்களை பற்றி பேசிய மாணவ மாணவிகளுக்கு அமைப்பின் சார்பில் பென்சில் பாக்ஸ், பென்சில், ரப்பர், ஸ்கேல், சார்பினர் மற்றும் சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டன.















