பாவாணர் தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி. திங்கள் பொழிவு-253, இன்று 15.12.2024 மாலை தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, நடைபெற்றது.


பொழிஞர் திருமிகு ஆறு. இளங்கோவன், “சமூக நீதிப் போராட்டங்கள்” உரையாடினார்.

நூல் வெளியீடு “இளங்குமரனார் மடல்கள்” நூல் வெளியீடு திரு சி. கேசவன், முதற்படி பெற்றவர் முனைவர் கு. திருமாறன், படிகள் பெற்றவர்கள் திரு மே.க. சுப்பிரமணியன், திரு ஆறு. இளங்கோவன், திரு மணிவண்ணன், திரு க. மாரிமுத்து மற்றும் பலர் பெற்றுக் கொண்டனர்.
முனைவர் செயலாபதி நன்றி உரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பேராசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.














