நேற்று 15.12.2024 ஞாயிறு மாலை காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 31 ஆவது கிளை காரைக்குடியில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், எழுத்தாளரும் கதைச்சொல்லியுமான கார்த்திகா கவின் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் ஆறு.மெ. மெய்யாண்டவன் அவர்கள் தமிழ் வாழ்த்தினைப் பாடி நிகழ்வினைத் தொடங்கினார்.


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிர் அணி அமைப்பாளர் முனைவர் இரா. வனிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைத்தலைவர் எழுத்தாளர் துரை அறிவழகன் அவர்கள் தலைமை வகித்துத் தலைமை உரையாற்றினார்.
இவ்வமைப்பின் செயலாளர் கவிஞர் பா. தென்றல் அவர்கள் நோக்கவுரை நிகழ்த்தினார்.
சாகித்திய அகாடமியின் பால புரஷ்கார் விருதாளரும், சிறார் இலக்கியத்தின் ஆகப்பெரிய விதையாக இருந்த குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகளுமான எழுத்தாளர், முனைவர் தேவி நாச்சியப்பன் அவர்கள் சிறார் இலக்கியத்தின் போக்கு குறித்து ஆகச்சிறந்த ஆய்வுரை போன்றதொரு சிறப்பான உரையை நிகழ்த்தி முன்னிலை வகித்தார்.
சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதாளர் மருத்துவர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் அயல்நாட்டு இலக்கியங்கள் குறித்தும் தமிழக சிறார் இலக்கியம் குறித்தும், சிறார் இலக்கியத்தில் நாம் செய்ய வேண்டிய செயல்களள் மற்றும் நகர்வுகள் குறித்தும் மிக நேர்த்தியாக ஆய்வுரை நிகழ்த்தி முன்னிலை வகித்தார்.

காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியின் செயலாளர் முனைவர் ஜீ சுவேதா அவர்கள் குழந்தைகள் குறித்தும், குழந்தைகளுடன் பயணப்பட்ட தன்னுடைய அனுபவப் பகிர்வினையும் மிகச் சிறப்பாக முன் வைத்து முன்னிலை வகித்தார்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பாகை இரா.கண்ணதாசன் அவர்கள், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர்(பொ
.) முனைவர் சே. நாகநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜா. சலேத் அவர்கள், தமுஎகச – வின் அறம் கிளை செயற்குழு உறுப்பினர் கவிஞர் சு. இளவரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
அரசு மகப்பேறு மருத்துவமனை மருந்தாளுநர் கவிஞர் சுபாரதி வெள்ளைச்சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க. மோகன் அவர்கள் நிகழ்வினை நெறியாளுகை செய்தார்.
நிகழ்வில் சிறுமி அ. பி.ஜனனிகா தனிநபர் நடிப்பும், சிறுவன் ரா. ஸ்ரீ அருஞ்சன் வாசிப்பு குறித்து உரையும் நிகழ்த்தினர்.


புதுக்கோட்டைக் கவிஞர் தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினைக் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜும்,
அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ் பண்பாட்டுத்துறை இயக்குனர் முனைவர் செந்தமிழ்ப்பாவை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினைக் கவிஞர் அனந்த கிருஷ்ணன் அவர்களும் வாசித்து அளித்தனர்.

காரைக்குடி தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக எழுத்தாளர் துரை. அறிவழகன் அவர்களும், செயலாளராக கவிஞர் பா. தென்றல் அவர்களும், பொருளாளராகப் முனைவர் க. மோகன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளார்கள்.














