பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித தோமினிக் மேல்நிலைப்பள்ளி தனது வைர விழா ஆண்டை கொண்டாடி வருகிறது. 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கான பள்ளியாக சேவையாற்றி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வைர விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி பெரம்பலூரில் இஸ்லாமிய பிரமுகர்கள் புனித தோமினிக் பள்ளிக்குச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் மௌலானா முஹம்மது முனீர் ஹஜரத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் குதரத்துல்லா, மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி, மாவட்ட பொருளாளர் சையது உசேன், முன்னாள் குவைத் மண்டல தமுமுகவின் பொறுப்பாளர் இஸ்மாயில்,

கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முஹம்மது ஹாரிஸ், பெரம்பலூர் நகர கிளையின் செயலாளர் அப்துல் அஜீஸ் உள்ளிட்டவர்கள் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமையாசிரியர் அருள் சகோதரி பாஸ்கா அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் புத்தகங்களையும் வழங்கி வாழ்த்தினர்.














