திருச்சி ஆரோக்கியமாதா பள்ளிக்கு வெள்ளிமகுடம்!
மாநில அளவிலான “பாரதியார் தின குழு” விளையாட்டுப் போட்டியானது டிசம்பர் மாதம் 8 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 38 மாவட்டத்தின் 19-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான “எறிபந்து” விளையாட்டுப் போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி கருமண்டபம், ஆரோக்கியமாதா பள்ளி மாணவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் திரு.ந.கேசவன் அவர்களையும், மாணவர்களையும் பள்ளி தாளாளர் அருட்தந்தை அ.ஜெயராஜ் அவர்களும் மற்றும் தலைமையாசிரியர் திரு.இ.ஜஸ்டின் அவர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

எறிபந்து விளையாட்டு என்றாலே ஆரோக்கியமாதா பள்ளிதான் வெற்றியின் மகுடம் என்று ஆண்டாண்டு காலமாய் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு இருப்பது மிகவும் சிறப்பே!.