• Home
  • தமிழ்நாடு
  • கிராம அறிவியல் திருவிழா வானவில் மன்றம் &  ITK காமராஜ் நகர்  இணைந்து நடத்திய கிராம அறிவியல் திருவிழா இன்று 24.12.2024 காமராஜ் நகர், அரியமங்கலத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

கிராம அறிவியல் திருவிழா வானவில் மன்றம் &  ITK காமராஜ் நகர்  இணைந்து நடத்திய கிராம அறிவியல் திருவிழா இன்று 24.12.2024 காமராஜ் நகர், அரியமங்கலத்தில் நடைபெற்றது.

Email :107

கிராம அறிவியல் திருவிழா வானவில் மன்றம் &  ITK காமராஜ் நகர்  இணைந்து நடத்திய கிராம அறிவியல் திருவிழா இன்று 24.12.2024 காமராஜ் நகர், அரியமங்கலத்தில் நடைபெற்றது.
விழாவில் சுமார் 40 குழந்தைகள் 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 
இவ்விழாவை சிறப்பாக  ஏற்பாடு செய்து தந்த  ITK ஆசிரியர்  செல்வி.மகாலட்சுமி அவர்கள் விழாவை முன்னின்றி வழி நடத்தினார்.

திருவரம்பூர் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் திரு.பகுத்தறிவன்.க அவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு, அறிவியல் அற்புதம், மந்திரமா தந்திரமா, மெட்ரிக் மேளா ஆகிய தலைப்பின் கீழ் குழந்தைகளின் பங்கேற்புடன் நிகழ்வை கொண்டு சென்றார்.

தமிழ்நாடு முழுவதும் 710 இடங்களில் இன்று  கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் தகவலை கூறி, இது போன்ற கிராம அறிவியல் திருவிழாவை நடத்தி பொதுமக்களிடமும் குழந்தைகளிடமும் அறிவியல் சிந்தனையை மேம்படுத்தக்கூடிய செயல்களை செய்கின்ற தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும்,

நிகழ்வில் பங்கேற்பு செய்த குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அனுமதி தந்த காமராஜ் நகர் பள்ளி மதிப்பிற்குரிய  தலைமை ஆசிரியர் , ஆசிரியர் பெருமக்களுக்கும் உடனிருந்து உதவி செய்த திருமிகு.மாரி அவர்களுக்கும் கிராம அறிவியல் திருவிழா  சார்பாக  நன்றியை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts