
இன்று 24.12.2024 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை தாங்கிய விழாவில் அவரின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி திருமதி N. S. மீனா சந்திரா மற்றும் நீதிபதிகள் ஆகியோருடன் சங்க நிர்வாகிகள் தலைவர் P.சுரேஷ் செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர்கள் R. பிரபு,

S. சசிகுமார், இணைச் செயலாளர் B. விஜய் நாகராஜன் பொருளாளர் S. R. கிஷோர் குமார் வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர்கள் M. ஜேசு பால்ராஜ், S. மார்ட்டின், P. சவரிமுத்து ( அரசு வழக்கறிஞர்), C. அந்தோணி ராஜ், P. கிறிஸ்டோபர் சத்யராஜ்,

Dr R. ராமச்சந்திரன் மற்றும் 400- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் P. V. வெங்கட் செய்து இருந்தார்.
