• Home
  • தமிழ்நாடு
  • பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் தேர்வு, திருச்சி.
தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் தேர்வு, திருச்சி.

Email :96

பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் தேர்வு, திருச்சி, ஆகஸ்ட் 1, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று (01.08.2025) நடைபெற்றது. இதில், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. அலோசியஸ் அவர்கள் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) நான்காம் சுற்றில் ‘A++’ தகுதியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ‘சிறப்பு மரபு தகுதி’ மற்றும் ‘சிறப்புத்தன்மை வாய்ந்த கல்லூரி’ (College with Potential for Excellence) அந்தஸ்தும் பெற்ற புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை தேர்தல் அதிகாரியான முனைவர் ஜெ. ஜான் லவ் ஜாய் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் அ. அலோசியஸ் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts